போலாமா?

குறும் புதினம்

பயண அனுபவங்களின் அடிப்படையில்.

© ஆசிரியர்: ஸுபா

இதில் வரும் விஷயங்களை நாங்கள் தீவிர ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளோம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!

“அப்பா அப்பா, நாம ஒரு நாய் குட்டி வைச்சுக்கலாமா?” என்று எங்க பசங்க பல வருடங்களாக நச்சரிச்சபோதும், எங்களோட ஒரே பதில், “உங்களை வளர்ப்பதே பெரிய பாடு. அதில் நாய் வேறயா” என்ற இத்து போன டயலாக் தான். அப்படி இருந்த நாங்க, பத்மாவின் அம்மா வீட்டில் ‘ரஸ்டி’ என்றொரு அழகான நாயின் வரவால், எந்த அளவுக்கு மாறினோம் என்பதை நினைத்து எங்களுக்கே ஆச்சரியம். நாய்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எப்படி வாழ்க்கையை இருக்கும் தருணத்தில் அனுபவிப்பது, எதிர்பார்ப்புகளற்ற அன்பை எப்படிக் கொடுப்பது ..அப்பப்பா இந்த ஜீவன்களைப் படைத்ததும் மனிதனைப் படைத்ததும் ஒருவன் (அ) ஒருத்தி தானா என்று நினைக்கத் தோன்றுகிறது. “நாயே” என்பது வசவு சொல் அல்ல, அது ஒரு வாழ்த்து!

ரஸ்டியின் காதிலே “போலாமா” என்ற வார்த்தை கேட்டால் போதும், உடனே தன் தலையை உயர்த்தி, ‘என்னையும் அழைத்துக்கொண்டு போவாயா’ என்கிற தோரணையில் பார்க்கும். ரஸ்டியை மனதில் வைத்துதான் இந்தப் பயணக்கட்டுரைக்கு “போலாமா” என்று பெயர் வைத்தோம்.

First edition: September 2026