சோமேஸ்வரர் கோயில்

ஸ்வாமி - சோமேஸ்வரர். அம்பாள் - சோமசுந்தரி.

சாரங்கபாணி கோயிலின் உட்புறத்திலேயே உள்ளது. இந்தச் சிவன் கோயிலில் திருமணம் ஆவதற்குக் காத்திருப்பதற்காக, பெருமாள் தங்கினார் என்ற நம்பிக்கை உண்டு. அருகில் உள்ள தெருக்களில் நிறைய மாடுகள் ‘ஹாயாக’ மேய்ந்து கொண்டிருந்தன.

கோயிலுக்குப் பக்கத்திலேயே கடை வீதி. ஒரு பையன் பிரமாதமான வெற்றிலை விற்றுக் கொண்டிருந்தான். நல்ல ‘கமர்’ வெற்றிலை வாசனைக் கிறக்கத்தில், கொஞ்சம் வெற்றிலைச் சீவல் ஊருக்கு எடுத்துச் செல்ல வாங்கினோம்.

சக்ரபாணி கோயில்

பெருமாள் - சக்ரபாணி. தாயார் - விஜயவல்லி.

சிவனைப் போல் இங்குள்ள பெருமாளுக்கு நெற்றியில் மூன்றாவது கண். சுதர்சன சக்கர விஷ்ணு கோயில். அரியும் சிவனும் ஒன்று என்று உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு உள்ளனவோ?

சுருட்டப்பள்ளி என்கிற இடத்தில் உள்ள கோயிலில் சிவபெருமான் ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் மாதிரிப் படுத்துக்கொண்டிருக்கிறார். கோயிலில் பெருமாள் கோயில் மாதிரி தீர்த்தம் தருகிறார்கள்.

இந்தச் சக்கரம்தான் பெருமாளின் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் என்று கருதுகிறார்கள். பட்டாச்சார்யார் சுதர்சன மந்திரத்தைச் சொல்கிறார். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. சாயங்காலம் கதைகள் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்க நிறைய இடம் இருக்கிறது. ஆற அமர இளைப்பாறிவிட்டு வரலாம்.

அடுத்தது ……

எங்காத்துக்கு திரும்பிப் போகணும்.